தேசிய செய்திகள்

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு?

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு 10 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். 2011-க்குப் பிறகு 2021-ல் நடக்க வேண்டிய கணக்கெடுப்பு கோவிட் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இப்போது 2025-2026 காலகட்டத்தில் நடத்துவதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்திய வரலாற்றில், 2025-26 கணக்கெடுப்பு முழுமையாக டிஜிட்டல் முறையில் நடைபெற இருக்கிறது. மக்கள் தங்களைப் பற்றிய தகவல்களை மொபைல் செயலி மூலம் தாங்களாகவே பதிவு செய்யும் வசதியும் இருக்கும். இது தரவுகளை விரைவாகச் சேகரிக்கவும், துல்லியமாகப் பகுப்பாய்வு செய்யவும் உதவும்.

மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் நிதி, மக்கள் தொகையின் அடிப்படையிலேயே ஒதுக்கப்படுகிறது. எத்தனை பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் தேவை என்பதைத் தீர்மானிக்க இது அவசியம் ஆகும்

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மத்திய பட்ஜெட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக பட்ஜெட்டில் ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

SCROLL FOR NEXT