திருவனந்தபுரம்,
கேரளத்தில் போலீஸ் நிலையங்களில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ள விசாரணை கைதிகள் உள்ளாடைகள் அணிய மட்டும் அனுமதிப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் அமரவிளா பகுதியை சேர்ந்த லெனின் ராஜ் மனு தாக்கல் செய்தார். அதில், விசாரணை கைதிகளை உள்ளாடைகள் அணிய மட்டும் அனுமதிப்பது மனித உரிமை மீறல். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதுகுறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரித்தது. இந்த விவகாரத்தில் காவல்துறையில் இருந்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வழிகாட்டு முறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை போலீஸ் டி.ஜி.பி. உறுதி செய்ய வேண்டும் என்றும், விசாரணை கைதிகள் உள்ளாடைகள் அணிந்து கொள்ள மட்டும் அனுமதிக்கும் போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணைய தலைவரும், நீதிபதியுமான அலெக்சாண்டர் தாமஸ் உத்தரவிட்டுள்ளார்.