தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.3.68 கோடி

இலவச தரிசனத்தில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இலவச தரிசனத்தில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 68 ஆயிரத்து 754 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 25 ஆயிரத்து 569 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று தேவஸ்தானம் அறிவித்த ஒருநாள் உண் டியல் காணிக்கை ரூ.3 கோடியே 68 லட்சம் ஆகும்.