தேசிய செய்திகள்

கள்ளக்காதலியுடன் ஓட்டல் அறையில் கணவன் ஜாலி...! பாய்ந்து வந்து மனைவி தாக்குதல் ...!

கள்ளக்காதலியுடன் ஓட்டல் அறையில் கணவன் ஜாலி...! பாய்ந்து வந்த மனைவி இருவரையும் செருப்பால் சரமாரியாக தாக்கினார்.

ஆக்ரா

ஆக்ரா டெல்லி நெடுஞ்சாலையில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனையில் ஐசியூ பிரிவு பொறுப்பாளராக வேலைபார்த்து வருபவர் தினேஷ் கோபால். இவர் தனது கள்ளக்காதலியுடன் டெல்லி ஓட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளார். இது குறித்த தகவல் அவரது மனைவி நீலத்திற்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் தனது மகன்-மகள் மற்றும் உறவினர்களுடன் ஓட்டலுக்கு வந்தார்.

ஓட்டல் அறையில் கணவன் மற்றொரு பெண்ணுடன் இருப்பதை பார்த்த மனைவி நீலம் கோபத்தின் உச்சிக்கே சென்றா. தன்னுடைய செருப்பைக் கழற்றி, கணவரையும் காதலியையும் கடுமையாகத் தாக்கினார். இந்த நேரத்தில், கணவனும் காதலியும் கைகூப்பிமன்னிப்பு கேட்டனர். மனைவியின் இதயம் இரங்கவில்லை. கள்ளக்காதலியின் கணவரை போன் மூலம் அழைத்து அவரிடம் தகவலை தெரிவித்து உள்ளார்.

மனைவி அடிக்கும் போது தினேஷ் குழந்தைகளிடம் காப்பாற்றுங்கள் என கூறி உள்ளார். நீங்கள் எங்கள் அப்பா என கூறுவது கேவலமாக உள்ளது என அவர்கள் கூறி உள்ளனர். பல மாதங்களாக கணவர் வேலை என கூறி விட்டு கள்ளக்காதலியுடன் சுற்றி வந்து உள்ளார். இதனை மனைவி கையும் களவுமாக பிடித்து உள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்