தேசிய செய்திகள்

போலீசுக்கு பயந்து பைக்கை வேகமாக ஓட்டிய கணவன்: கீழே விழுந்த மனைவியை தவிக்க விட்டு தப்பியோட்டம்

போலீசாரிடம் சிக்காமல் தப்பிக்க நினைத்த அவர், திடீரென பைக்கின் வேகத்தை அதிகரித்து மின்னல் வேகத்தில் ஓட்டினார்.

டேராடூன்,

உத்தராகண்ட் மாநிலத்தில் போலீசாரின் வாகன சோதனையின் போது, பயந்து போய் மனைவியை சாலையில் கீழே தவிக்க விட்டுவிட்டு கணவன் பைக்கில் தப்பியோடிய விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

போலீஸ் சோதனை

உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் பைக்கை ஓட்டி வந்த கணவர் கடும் அதிர்ச்சியடைந்தார்.

மனைவி கீழே விழுந்தார்

போலீசாரிடம் சிக்காமல் தப்பிக்க நினைத்த அவர், திடீரென பைக்கின் வேகத்தை அதிகரித்து மின்னல் வேகத்தில் ஓட்டினார். அப்போது எதிர்பாராதவிதமாக பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த அவரது மனைவி நிலைதடுமாறி சாலையில் கிழே விழுந்தார்.

பெண் வலியால் துடித்தார்

தன் மனைவி கீழே விழுந்ததை கவனித்த நிலையிலும், "தான் தப்பித்தால் போதும், போலீசில் சிக்க கூடாது" என்ற சுயநலத்துடன் அந்த கணவன் பைக்கை நிறுத்தாமல் பறந்து சென்றார். சாலையில் விழுந்த பெண் வலியால் துடித்தார்.

போலீசார் முதலுதவி

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், உடனடியாக ஓடி சென்று அந்த பெண்ணை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக அந்த பெண்ணிற்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டிருந்தன. இதையடுத்து, மனிதாபிமானத்துடன் செயல்பட்ட போலீசார் அந்த பெண்ணிற்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பாசமான கணவன் என்று நினைத்தவர், போலீசை கண்டதும் மனைவியை ரோட்டில் போட்டுவிட்டு ஓடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT