திருப்பதி,
கள்ளக்காதலனுடன் வீட்டில் உல்லாசமாக இருந்ததை பார்த்த கணவரை கொல்ல திட்டம் தீட்டிய மனைவியால் பரபரபை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம், மெஹபூபா பாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வர ராவ் இவர் கம்பம் மாவட்டம். எடுலபுரம், காய் பிரசாத் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இவரது மனைவி கல்பனா. தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். ராஜேஸ்வர ராவ் கம்பத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வருகிறார்.
கடந்த மாதம் 27-ந் தேதி மதிய உணவு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது மனைவி, கொரியர் நிறுவனத்தில் வேலை செய்யும் சைதுலு என்பவருடன் வீட்டில் உல்லாசமாக இருந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வர ராவ் மறுநாள் மனைவியின் நடத்தை குறித்து சிலுக்கோடுவில் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து வைக்க முடிவு செய்தார். பஞ்சாயத்திற்கு தனது அண்ணன் சீனிவாசலுவை அழைக்க சென்று கொண்டிருந்தார். அப்போது மனைவிக்கு அறிமுகமான நபர் அவரை பின்தொடர்வதை கவனித்தார். அவரைப் பிடிக்க முயன்ற போது அவர் தப்பிச் சென்றார். பின்னர் வீட்டிற்கு வந்த ராஜேஸ்வர ராவ் மனைவியின் செல்போனை எடுத்து ஆய்வு செய்தார். மனைவியின் செல்போனில் இருந்த தகவலை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கள்ளக்காதலுக்கு இடையூறு
செல்போனில் கல்பனா கள்ளக்காதலுக்கு இடையூராக உள்ள தனது கணவரை கொலை செய்ய வேண்டும். வீட்டில் வைத்து கொலை செய்ய வேண்டாம். வெளியில் செல்லு போது யாரையாவது ஏற்பாடு செய்து காரை ஏற்றி கொலை செய்து விடுங்கள். கணவரை கொலை செய்ய முடியா விட்டாள் நான் தற்கொலை செய்து கொள்வேன் என தகவல் அனுப்பி இருந்தார்.
ராஜேஸ்வர மனைவியின் செல்போனை எடுத்துக்கொண்டு நேராக கம்மம் போலீஸ் நிலையத்திற்கு சென்றார்.
மனைவி கொரியர் நிறுவனத்தில் வேலை செய்யும் சைதுலு என்பவருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வருகிறார்.
கண்டித்ததால் கள்ளக்காதலுடன் சேர்ந்து சதி செய்து, என்னை கொலை செய்ய முயற்சி செய்கிறார் என கதறியபடி கூறினார். பின்னர் மனைவியின் செல் போனை போலீசாரிடம் கொடுத்து அவர் கள்ளக் காதலனுக்கு அனுப்பிய செய்திகளை காண்பித்தார்.
போலீசார் கம்பம் தாலுக்கா போலீஸ் நிலையத்திற்கு வழக்கை மாற்றி அனுப்பினார். போலீசார் கல்பனா மற்றும் சைதுலுவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.