ஐதராபாத்,
ஐதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையத்தின் எக்ஸ் வலைதளம் திடீரென முடக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்துக்கு என தனி எக்ஸ் வலைதள கணக்கு இருந்து வந்தது. இதில் விமான சேவைகள், விமான சேவை மாறு ஏற்பட்டால் அது தொடர்பான அறிவிப்புகளை விமான நிலைய நிர்வாகம் வெளியிட்டு வந்தது.
இந்த நிலையில் திடீரென்று மர்மநபர்கள் ஐதராபாத் விமான நிலையத்தின் எக்ஸ் தளத்தை முடக்கினர். இதை அறிந்த விமான நிலைய அதிகாரிகள் உடனே சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். மேலும் தகவல் தொழில்நுட்ப குழுவினர், அந்த எக்ஸ் தள பக்கத்தை மீட்டனர்.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், எக்ஸ் கணக்கு விமான நிலைய அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை. எனவே, விமான நிலைய செயல்பாடுகள், பயணிகள் சேவைகள் அல்லது செயல்பாட்டு அமைப்பு களில் எந்தப் பாதிப்பும் இல்லை என்றனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.