தேசிய செய்திகள்

நரகத்தில் இருக்கிறேன்; அழைத்து செல்லுங்கள்: மரணத்திற்கு முன்பு முன்னாள் மிஸ் புனே கதறல்

அவரை பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.10 ஆயிரம் பரிசு அளிக்கப்படும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

புனே

மராட்டியத்தில் மிஸ் புனே அழகி போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர் துவிஷா சர்மா (வயது 31). வழக்கறிஞரான சமர்த் சிங் என்பவருடன் டேட்டிங் செயலி மூலம் தொடர்பு ஏற்பட்டு, கடந்த ஆண்டு இவர்களின் திருமணம் நடந்தது. மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் கணவர் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதியான மாமியார் கிரிபலா சிங் ஆகியோருடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, கணவர் வீட்டில் தூக்கு போட்டு துவிஷா தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மரணத்தில் மர்மம் உள்ளது, உடலுக்கு இறுதி சடங்கு செய்ய முடியாது என்று கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.