தேசிய செய்திகள்

நீ இல்லாமல் இந்த உலகில் என்னால் வாழ முடியாது: காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலம், ஷம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்த ஒரு காதல் ஜோடி பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் காதலன் உயிரிழந்தார்.

திருப்பதி,

தெலுங்கானா மாநிலத்தில் சாலை விபத்தில் காதலன் இறந்ததால் ஏற்பட்ட துக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருமணம் செய்ய முடிவு

தெலுங்கானா மாநிலம், ஷம்ஷாபாத், சித்தேஸ்வர் காலனியை சேர்ந்தவர் நர்மதா (வயது 19). இவரது காதலன் சித்தார்த்த பெஜானி கவுட். இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருந்தனர்.

சாலை விபத்தில் காதலன் உயிரிழப்பு

இந்த நிலையில் சித்தார்த்த பெஜானி கவுட் கடந்த 15 நாட்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். காதலன் இறந்தது முதல் நர்மதா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். அடிக்கடி காதலன் இல்லாமல் இந்த உலகில் என்னால் உயிர் வாழ முடியாது என தெரிவித்து வந்தார். பெற்றோர்கள் நர்மதாவை சமாதானம் செய்து வந்தனர்.

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

நேற்று நர்மதாவின் பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நர்மதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆர்.ஜி.ஐ.ஏ. போலீசார் நர்மதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT