விஜயவாடா,
தமிழக முதல்-அமைச்சர் விஜய் இன்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்திப்பதற்காக விஜயவாடா சென்றார்.
தொடர்ந்து விஜயவாடா விமான நிலையம் சென்றடைந்த முதல்-அமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் விஜய் அங்கிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள கிருஷ்ணா நதிக்கரையில் இந்திரகீலாத்ரி மலையில் அமைந்துள்ள கனக துர்கை அம்மன் கோவிலுக்குச் சென்றார். அங்கு முதல்-அமைச்சர் விஜய்க்கு மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் அங்கு சாமி தரிசனம் செய்தார்.
இதனையடுத்து முதல்-அமைச்சர் விஜய், அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுடன் நதிநீர் இணைப்பு மற்றும் கோதாவரி-காவிரி இணைப்புத்திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர், அம்மாநில பாரம்பரிய, கலாச்சார நிகழ்ச்சியான விஜயவாடா உத்சவ் 2.0 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் சிறிது நேரம் பேசினார்.
அவர் பேசியதாவது:-
“அனைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்த ஆந்திர மக்களுக்கு நன்றி. நவராத்திரி விழாவில் கலந்துகொண்டதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இரு மாநில வளர்ச்சி குறித்து ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தியது மகிழ்ச்சியளிக்கிறது. ஆந்திர மக்களின் விருந்தோம்பலுக்கு நன்றி. தெலுங்கானா முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தெலுங்கில் பேசத்தொடங்கிய அவர் தமிழில் தனது பேச்சை நிறைவு செய்தார்.
முன்னதாக நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் மற்றும் தமிழ்நாடு அமைச்சர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது.