தேசிய செய்திகள்

எனது நாடு நீதியை பெற்றுத் தந்துள்ளது, ஒட்டுமொத்த தேசத்திற்கும் நீதி கிடைத்துள்ளது- நிர்பயாவின் தாயார் பேட்டி

எனது நாடு நீதியை பெற்றுத் தந்துள்ளது, ஒட்டுமொத்த தேசத்திற்கும் நீதி கிடைத்துள்ளது என்று நிர்பயாவின் தாயார் உருக்கமாக தெரிவித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதையடுத்து நிர்பயாவின் தாயார் அளித்த பேட்டியில் கூறியதாவது;-

நிர்பயாவுக்கு இறுதியாக நியாயம் கிடைத்திருக்கிறது. என் மகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த பெண்களுக்கும் நீதி கிடைத்துள்ளது. எனது நாடு நீதியை பெற்றுத் தந்துள்ளது, ஒட்டுமொத்த தேசத்திற்கும் நீதி கிடைத்துள்ளது.

இந்தியாவின் மகள்களுக்கான, அவர்களின் நீதிக்கான எங்கள் போராட்டத்தை நாங்கள் தொடருவோம். நீதிக்கான எங்கள் காத்திருப்பு வேதனையாக இருந்தது, ஆனால் இறுதியாக எங்களுக்கு நீதி கிடைத்தது. எனது மகளின் புகைப்படத்தை நான் ஆரத்தழுவி கொண்டேன் என்றார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து