புதுடெல்லி,
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதல் இயக்குனராக பணியாற்றி ஒய்வு பெற்றவரும், முதுபெரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளருமான நாகசாமி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி, நாகசாமியின் மறைவால் வேதனை அடைவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'தமிழகத்தின் எழுச்சிமிக்க கலாச்சாரத்தை பிரபலப்படுத்துவதில் திரு.ஆர்.நாகசாமியின் முன்மாதிரியான பங்களிப்பை வரும் தலைமுறையினர் மறக்க மாட்டார்கள்.
வரலாறு & தொல்லியல் மீதான அவரது ஆர்வம் குறிப்பிடத்தக்கது. அவரது மறைவால் வேதனை அடைகிறேன். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுதாபங்கள். ஓம் சாந்தி' என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.