மேற்கு வங்காளத்தில் முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இரண்டாவது கட்ட தேர்தல் வரும் 29 ஆம் தேதி 142 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இரண்டாவது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் அனல் பறக்க நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கொல்கத்தாவின் சவுரிங்கிப் பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியது: “ பா.ஜனதாவால் எங்களை தோற்கடிக்க முடியாது. நாங்கள் அநீதிக்கு எதிராகப் போராடுகிறோம். எங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிறோம்.
நான் வங்கத்தில் பிறந்தேன். இந்த வங்கத்திலேயே என் இறுதி மூச்சையும் விடுவேன். மேற்கு வங்காளத்தில் வெற்றியை உறுதி செய்த பிறகு, நான் டெல்லியை எனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன். அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைப்பதன் மூலம் நான் இதைச் செய்வேன்” என்று கூறியிருந்தார். இந்த நிலையில், மம்தா பானர்ஜியின் பதிலடி கொடுத்துள்ள அமித்ஷா, இது குறித்து பேசியதாவது; மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு என்று எதுவும் மிச்சமில்லை. அவர் எப்படி டெல்லிக்கு வருவார்?” என்று சிரித்தபடி கூறினார்.