புதுடெல்லி,
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி எழுதிய சுயசரிதை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், அவரும், அவருடைய மகன் ராகுல்காந்தி, மகள் பிரியங்கா ஆகியோரும் உரையாடும் வீடியோவை 3 பேரும் தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.
அந்த உரையாடல் குறித்து ராகுல்காந்தி கூறியிருப்பதாவது:-
சுயசரிதையில் இன்னும் நிறைய விஷயங்களை நீங்கள் எழுதி இருக்க வேண்டும் என்று என் தாயாரிடம் சொன்னேன். அவர் புத்தகத்தில் பலரைப் பற்றி மிகவும் கனிவாக எழுதி உள்ளார். அது அவரது இயல்பு.
அரசியலில் என் தாயார் வசைபாடப்பட்டதையும், தாக்கப்பட்டதையும், அவமானப்படுத்தப்பட்டதையும் நான் பார்த்துள் ளேன். அவற்றை நினைத்தாலே அருவருப்பாக இருக்கும். கவுரவமான மனிதர்களின் வசைமொழிகள் கூட சொல்லப்பட வில்லை.
அவற்றை என் தாயார் சொல்ல மாட்டார். ஆனால் ஒருநாள் நான் சொல்வேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.