புயல் பாதிப்பு குறித்து ஆய்வு
ஆந்திர மாநிலத்தில் 'முரசு' புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை தொடர்ந்து நிவார ணம் மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து அமராவ தியில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற் கொள்ளப்பட்டு வரும் மீட்பு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
தோட்டக்கலை பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களில் 92 சதவீதம் கணக்கிடப்பட் டுள்ளதாகவும், விவசாய பயிர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்த கணக்கெ டுப்பு நவம்பர் 9-ந் தேதிக்குள் முடிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்த னர்.
முன்னதாக ஏற்பட்ட 'அர்னாப்' புயலின்போது சுமார் 30 ஆயிரம் மின்கம்பங்கள் சேதமடைந்தன. இதனால் பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களிலும் தற்போது மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. முரசு' புயலால் பாதிக்கப்பட்ட 1,825 கிராமங்களில் மின்சார சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 7,850 மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டுள்ள தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புயல் நிவாரணப் பணிகளின் ஒரு பகுதியாக இதுவரை 3.8 லட்சம் குடும்பங்க ளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. வெங்காயம், அரிசி, பாமாயில், கோதுமை மாவு, துவரம் பருப்பு ஆகியவற்றின் விலையை கட்டுப்ப டுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 8 ஆயிரம் குவிண்டால் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, விவ சாயிகள் சந்தைகள் மூலம் கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பல் வேறு ரக அரிசிகளை கிலோ ரூ.47 முதல் ரூ.82 வரை விற்பனை செய்ய வியா பாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.தனியார் சந்தையில் கிலோ ரூ.70-க்கு விற்கப்படும் தாரணி ரக அரிசி, விவசாயி கள் சந்தைகளில் ரூ.50-க்கும், பி.பி.டி. ரக அரிசி ரூ.49-க்கும் விற்பனை செய்யப் படுகிறது. இதுவரை 150 விற்பனை மையங்கள் மூலம் 27,430 குவிண்டால் அரிசி விற்பனை செய்யப்பட்டு, 1.03 லட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளன.
ரேஷன் கடைகள் மூலம் பாமாயில் லிட்டர் ரூ.125-க்கும், துவரம் பருப்பு கிலோ ரூ.100-க்கும், கோதுமை மாவு கிலோ ரூ.25-க்கும் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசு உத்தரவை மீறி செயல்பட்ட 204 வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிதியுதவி கிடைப்பதையும், அத்தி யாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி குறைந்த விலையில் கிடைப்பதையும் அதி காரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.