புதுடெல்லி,
மத்திய சட்ட மந்திரி அர்ஜுன்ராம் மெக்வால் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது-
தொகுதி மறுவரையறை முன்மொழிவின் ஒரு நேர்மறையான அம்சம் என்னவென்றால், அது மாநிலங்களுக்கு இடையே யான தற்போதைய இடங்களின் விகிதத்தை பராமரிக்கவும் முயல்கிறது. நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலத்துக்கும், அது தெற்கில் இருந்தாலும் சரி, வடக்கில் இருந்தாலும் சரி, அதற்கு உரிய முக்கியத்துவம் உண்டு. வளர்ச்சியை முன் னெடுக்கும்போது, ஒவ்வொரு மாநிலத்துக்குமான பிரதிநிதித்துவத்தில் ஒரு சமநிலையை பராமரிப்பது அவசியமாகும்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
மேலும் தென் மாநிலங்களில் தற்போது உள்ள தொகுதிகள், இனி அதிகரிக்கப்போகும் எண்ணிக்கை, அதற்கான விகி தாச்சாரம் தொடர்பான அட்டவணையையும் வெளியிட்டு உள்ளார். அதில் தமிழ்நாட்டில் தற்போது 7.18 விகிதாச்சாரத் தில் உள்ள 39 தொகுதிகள் 59 தொகுதிகளாக (7.23) அதிகரிக்கும் என்றும், கர்நாடகத்தின் தற்போதைய 5.15 சதவீதம் அதே மாதிரி தொடர்ந்து தொகுதிகள் 28-ல் இருந்த 42 ஆக அதிகரிக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.