தேசிய செய்திகள்

மண்டியாவில் மண்ணை தின்று பா.ஜனதா பிரமுகர் போராட்டம்

மண்டியாவில் பா.ஜனதா பிரமுகர் மண்ணை தின்று போராட்டம் நடத்தினார்.

மண்டியா:

மண்டியாவில் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். அப்போது பா.ஜனதா பிரமுகரான சிவக்குமார் என்பவர், கையில் ஒரு பெரிய தட்டில் மண் எடுத்து வந்திருந்தார். அப்போது காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர்திறந்துவிட்டு மாநில அரசு கர்நாடக விவசாயிகள் வாயில் மண்ணை அள்ளி போட்டுவிட்டதாக கூறி கோஷமிட்டப்படி, தட்டில் இருந்த மண்ணை வாயில் அள்ளி போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

SCROLL FOR NEXT