தேசிய செய்திகள்

ஒடிசாவில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து

ஒடிசாவில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

புவனேஷ்வர்,

ஒடிசாவில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் பத்மநாபா பெஹ்ரா கூறுகையில்,

ஒடிசாவில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். ஒடிசாவில் நடக்கும் விபத்துகளில் பெரும்பாலான உயிரிழப்புகள் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவதால் ஏற்படுகிறது. இதைத் தடுக்க கடுமையான விதிமுறைகளை உருவாக்கியுள்ளோம் என்றார்.

ஒடிசாவில் கடந்த 2019- அம் ஆண்டு நடைபெற்ற 11,064 சாலை விபத்துக்களில் 4 ஆயிரத்து 688 விபத்துகள் இருசக்கர வாகன விபத்துகள் ஆகும். அம்மாநிலத்தில் கடந்த ஆண்டு விபத்துகளினால் ஏற்பட்ட உயிரிழப்பு 5 ஆயிரத்து 333 ஆக இருந்தது. அதில், 2 ஆயிரத்து 398- பேர் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஆவர். இவர்களில் 2,156- பேர் விபத்தின் போது தலைக்கவசம் அணியாமல் இருந்துள்ளனர்.

SCROLL FOR NEXT