கியாஸ் சிலிண்டரில் கசிவு
பெங்களூரு மல்லேசுவரம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒரு வீட் டுக்கு நேற்று முன்தினம் ஒரு கியாஸ் ஏஜென்சியில் பணியாற்றும் ஊழியர் ஒரு வர் புதியதாக சமையல் கியாஸ் சிலிண்டரை டெலிவரி செய்ய கொண்டு வந் தார்.அந்த சிலிண்டரை அவர் வீட்டின் வாசல் முன்பு வைத்து, சிலிண்டரின் மூடியை கழற்றினார். அந்த சமயத்தில் திடீரென்று கியாஸ் சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்தது. இதனால் ஏன் கியாஸ் கசிகிறது என அந்த ஊழியர் சிலிண்டரில் ஆய்வு செய்து கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் அந்த வீட்டின் வாசலில், விளக்கில் தீபம் ஏற்றி வைக்கப்பட்டு இருந்தது. சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்து, காற்றில் பரவி தீபவிளக்கு அருகே சென்றதும் திடீரென சிலிண்டரில் தீப்பிடித்தது.கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த ஊழி யர் சாமர்த்தியமாக செயல்பட்டு சிலிண்டரை வீட்டு வாசலை தாண்டி வெற்று இடத்தில் தள்ளிபோட்டார். இதனால் அவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். அதுபோல் வீட்டில் இருந்தவர்களும் உயிர் தப்பினர்.
இருப்பினும் சிலிண்டர் கியாஸ் கசிந்தபடி இருந்ததால் தொடர்ந்து தீ எரிந்தப்படி இருந்தது. உடனே வீட்டுக்குள் சென்ற அந்த ஊழியர், வாளியில் தண்ணீரை எடுத்து வந்து தீப்பிடித்து எரிந்த சிலிண்டர் மீது ஊற்றினார். இதையடுத்து சிலிண்டரில் பிடித்த தீ சிறிது நேரத்தில் அணைந்தது.டெலிவரி செய்ய வீட்டுக்கு சிலிண்டரை ஊழியர் எடுத்து வந்ததும், அந்த சிலிண் டரின் மூடியை அவர் கழற்றியதும், அப்போது சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்ததும், வீட்டு முன்பு வைத்திருந்த தீப விளக்கால் கியாஸ் சிலிண்டரில் தீப்பி டித்ததும், அந்த தீயை அணைக்க ஊழியர் போராடிய காட்சிகளும் அந்த வீட் டில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, காண்போரின் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. மேலும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.