ai image 
தேசிய செய்திகள்

ரெயில் மீது கல்வீச்சு சம்பவங்கள் அதிகரிப்பு; ரெயில்வே வாரிய தலைவர் அறிவுறுத்தல்

ரெயில்வே அதிகாரிகள், ரெயில்வே பாதுகாப்பு படை, அரசு ரெயில்வே படை ஆகியோர் பகிரப்பட்ட ஈடுபாட்டுடன் செயல்பட்டு, பாதுகாப்பு தொடர்பான சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

புதுடெல்லி

ரெயில் மீது கல்வீச்சு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், ரெயில்வே வாரிய தலைவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

ரெயிலில் கோடிக்கணக்கான மக்கள் தினசரி பயணம் செய்கின்றனர். குறைந்த கட்டணம், நிறைவான பயணம் என்ற வகையில் பயணிகளுக்கு நன்மை பயப்பதுடன், நீண்டதூர பயணத்திற்கு ஏற்ப படுக்கை வசதி, குளிர் சாதன வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் கிடைக்கின்றன.

கல்வீச்சு அதிகரிப்பு

ஆனால், பயணம் பாதிக்கப்படும் வகையில், இந்தியாவில் ரெயில்கள் மீது கல்வீசும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிகாரபூர்வ தரவுகளின்படி, ரெயில்கள் மீது 2021 முதல் 2025 வரையிலான ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் மொத்தம் 12,157 கல்வீச்சுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவை தொடர்பாக 8,441 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில் மட்டும் 1,698 வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் வந்தே பாரத், ஸ்வர்ண சதாப்தி, துரந்தோ போன்ற அதிவிரைவு பிரீமியம் ரெயில்களும் அடங்கும்.

ரெயில்வே வாரியம்

இதனை எதிர்கொள்வதற்கான பணிகளில் ரெயில்வே வாரியம் ஈடுபட்டு வருகிறது. இதுபற்றி ரெயில்வே வாரிய தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான சதீஷ் குமார் கூறும்போது, ஒருங்கிணைந்த முயற்சிகள், தொழில் நுட்ப வசதிகள், புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றை பயன்படுத்துவதுடன், ரெயில்வே அதிகாரிகள், ரெயில்வே பாதுகாப்பு படை, அரசு ரெயில்வே படை ஆகியோர் பகிரப்பட்ட ஈடுபாட்டுடன் செயல்பட்டு, பாதுகாப்பு தொடர்பான சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

SCROLL FOR NEXT