தேசிய செய்திகள்

காரைக்காலில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி வேட்பாளர்களை வீழ்த்தி வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர்

சுயேட்சை வேட்பாளர் டாக்டர். வி. விக்னேஸ்வரன், அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் சந்திரபிரியங்காவை 4,499 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

புதுச்சேரி,

30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கு கடந்த 9ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் புதுச்சேரியில் பெரும்பான்மைக்கு 16 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணி, காங்கிரஸ் - திமுக கூட்டணி, தவெக கூட்டணி என 3 முனை போட்டி நிலவியது. இந்தநிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நெடுங்காடு சட்டமன்ற தொகுதியில் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் சந்திரபிரியங்கா, இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் தினேஷ்குமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விக்னேஷ்,தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர் காமராஜ் மற்றும் சுயேட்சை வேட்பாளர் டாக்டர். வி. விக்னேஸ்வரன் ஆகியோர் களம் இறங்கினர்.

அதில்,சுயேட்சை வேட்பாளர் டாக்டர். வி. விக்னேஸ்வரன், அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் சந்திரபிரியங்கா 4,499 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.

நெடுங்காடு சட்டசபைத் தேர்தல் முடிவு (2026)

வேட்பாளர் கட்சி வாக்குகள்

டாக்டர். வி. விக்னேஸ்வரன்

சுயேட்சை

14,368

4,499 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

சந்திரபிரியங்கா

அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ்

9,869

யு காமராஜ்

தமிழக வெற்றிக் கழகம்

1,865

தினேஷ்குமார்

இந்திய தேசிய காங்கிரஸ்

1,354

அ. விக்னேஷ்

நாம் தமிழர் கட்சி

510

நோட்டா

None Of The Above

335

அருள் பிரகாஷ்

சுயேட்சை

130