பிரிக்ஸ் 
தேசிய செய்திகள்

பிரிக்ஸ் வர்த்தக மன்ற கூட்டத்தில் சாதனை; 5 மணி நேரத்தில் 600 வர்த்தக சந்திப்புகள்

இந்தியாவின் தலைமைப் பொறுப்பு. புத்தாக்கம் மற்றும் தொழில்மு னைவோர் சூழல் அமைப்பை வலுப்படுத்த முயன்றுள்ளது என ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

பிரிக்ஸ் உச்சி மாநாட்டை முன்னிட்டு, வர்த்தக மன்ற கூட்டத்தில் 5 மணி நேரத்தில் 600-க்கும் மேற்பட்ட வர்த்தக சந்திப்புகள் நடந்துள்ளன.

வர்த்தக மன்றம்

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்றும் (சனிக்கிழமை), நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை முன்னிட்டு வர்த்தக மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த வர்த்தக மன்றம், பிரிக்ஸ் அமைப்பின் முதன்மை தனியார்துறை தளம் ஆகும். இது ஆண்டுதோறும் உச்சி மாநாடு நடைபெறும் நாட்டில், மாநாடு தொடங்குவதற்கு முந்தைய நாள் நடைபெறும். அதன்படி நேற்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் ரஷிய கூட்ட மைப்பின் பொருளாதார மேம்பாட்டு மந்திரி மாக்சிம் ரெஷெட்னிகோவ், மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர், வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல், இணை மந்திரி ஜிதின் பிரசாதா மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் ராஜேஷ் அகர்வால் ஆகியோர் தொடக்க அமர்வில் உரையாற்றினார்கள்.

ஜெய்சங்கர்

வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பேசுகையில், "பிரிக்ஸ் அமைப்பானது, பன்முகத் தன்மை வாய்ந்த, அதே சமயம் ஒன்றுக்கொன்று துணைபுரியும் வளங்கள், சந்தைகள், திறன் கள் மற்றும் அனுபவங்களைக் கொண்ட பொருளாதாரங்களை ஒன்றிணைக்கிறது. 20 ஆண்டு களை இந்த அமைப்பு நிறைவு செய்வதால், இந்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்புக்கு ஒரு மைல் கல்லாக அமைகிறது. இந்தியாவின் தலைமைப் பொறுப்பு. புத்தாக்கம் மற்றும் தொழில்மு னைவோர் சூழல் அமைப்பை வலுப்படுத்த முயன்றுள்ளது" என்று கூறினார்.

பியூஸ் கோயல்

தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல், "பிரிக்ஸ் நாடுகள் தங்களின் பொருளாதார பலத்தை, தங்கள் மக்களுக்கு வேலைவாய்ப்பு, செல்வம் மற்றும் செழிப்பாக மாற்றுவதற்கு ஒன்றி ணைந்து செயல்பட வேண்டும். பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தில் இந்தியா ஒரு முக்கிய தூணாக உருவெடுத்துள்ளது. உலகின் மருந்தகம் என்று அழைக்கப்படும் இந் தியா, மருந்துப் பொருட்கள் மற்றும் பிற இந்திய தயாரிப்புகளுக்கு பிரிக்ஸ் அமைப்பை ஒரு முக்கிய சந்தையாகக் கருதுகிறது. எனவே, பிரிக்ஸ் கூட்டாளிகளுக்கு இடையேயான வர்த்த கம் ஆழமானதாகவும், நெகிழ்வானதாகவும், பல்வகைப்பட்ட வினியோகச் சங்கிலிகளால் ஆத ரிக்கப்படுவதாகவும் இருக்க வேண்டும். இதன்மூலம் உறுப்பு நாடுகளில் உள்ள மக்களின் வளர்ச்சிக்கும், நல்வாழ்வுக்கும் வர்த்தகம் ஒரு தடையாக மாறாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்" என்று கூறினார்.

600 சந்திப்புகள்

இந்த வர்த்தக மன்ற கூட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட சந்திப்புகள் நடைபெற்றதாக இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஆனந்த் சொரூப் தெரி வித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், "இந்த வர்த்தக மன்றம் இந்தியாவில் இருந்து 1100 ' பிரதிநிதிகளையும், வெளிநாட்டில் இருந்து 900 பிரதிநிதிகளையும் ஒன்றிணைத்து உள்ளது. தொழில் நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று சந்திப்பு நடத்துவதற்காக நாங்கள் ஒரு வலைத்த ளத்தை திறந்து இருந்தோம். இதில் 5 மணி நேரத்தில் 600-க்கும் மேற்பட்ட சந்திப்புகள் நடைபெற்று சாதனை படைத்துள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT