டெல்லி,
இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்ரேலையும், அமெரிக்காவையும் ஈரான் எதிரிகளாக கருதுகிறது. இந்த மோதல் பல ஆண்டுகளாக நிலவி வருகிறது.
இதனிடையே, ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்கா முயற்சித்தது. ஆனால், அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனால் ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா இன்று தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளம் உள்ள குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஓமன், ஜோர்டான் போன்ற நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் அனைத்து தரப்பும் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டுமென இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.
அனைத்து தரப்பும் மோதலை கைவிட்டு பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீரிக்க வேண்டும். பிற நாடுகளில் இறையாண்மையை மற்ற நாடுகள் மதிக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.