புதுடெல்லி,
ஓமன் கடற்கரைக்கு அருகே ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்று கொண்டிருந்த (MT ON PEACE) வணிகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பயணம் செய்த 17 இந்தியர்கள் உட்பட 19 பேர் காயமடைந்துள்ள சம்பவத்திற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கருங்கடலில் எம்.வி. ராயத் மம்மடோவ் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். இதில் இரண்டு வெளிநாட்டு மாலுமிகள் கொல்லப்பட்டனர்.
இந்த கப்பலின் 19 பேர் கொண்ட பணியாளர் குழுவில் 17 பேர் இந்தியர்கள் ஆவர். இதில் 11 இந்தியர்கள் உட்பட மொத்தம் 12 பணியாளர்கள் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
காயமடைந்தவர்கள் ருமேனிய அதிகாரிகளால் மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். கப்பலின் பணியாளர்களாக இருந்த மூன்று இந்திய நாட்டினரும் பாதுகாப்பாக உள்ளனர். இந்த சம்பவத்தில் விரைந்து செயல்பட்ட ருமேனிய அதிகாரிகளுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்.
வர்த்தக கப்பல்கள் மற்றும் மாலுமிகள் மீதான இந்தத் தாக்குதல்களை இந்தியா மிகுந்த கவலையுடன் பார்க்கிறது. சர்வதேச நீர்வழிகளில் போக்குவரத்தை குறிவைப்பது, உலகளாவிய வர்த்தகத்தையும் உலகெங்கிலும் உள்ள மக்களின் நலனையும் கடுமையாகப் பாதிக்கிறது. தொடரும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்திற்கு நாங்கள் தொடர்ந்து அழைப்பு விடுக்கிறோம்.
செப்டம்பர் 2026-ல், வர்த்தக கப்பல் பணியாளர்கள் மற்றும் வர்த்தகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இந்தியாவும் லைபீரியாவும் ஐ.நா. பொதுச் சபையின் போது "கப்பல் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கான நண்பர்கள் குழு" என்ற புதிய 25-நாடுகள் அமைப்பை தொடங்கி உள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.