புதுடெல்லி,
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரளய் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. ஒடிசா கடற்கறையில் காலை 11:10 மணிக்கு இச்சோதனை நடந்தது.
ராணுவ மதிப்பீடுகளின் ஒரு பகுதியாக நடந்த இச்சோதனையின் போது, பல்வேறு கருவிகள் வாயிலாக கிடைத்த தகவலின்படி குறிப்பிட்ட இலக்குகளை துல்லியமாக தாக்கியது.
சோதனை நடத்திய விஞ்ஞானிகளுக்கு மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.
உள்நாட்டு தொழில் நுட்பங்களால் உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணை, துல்லியம் மற்றும் அதிநவீன வழிகாட்டுதல் அமைப்புகளுக்கு பெயர் பெற்ற பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும். இது பல வகையான அணுஆயுதங்களை சுமந்து சென்று இலக்குகளை தாக்கும் திறன் பெற்றது. இந்த ஏவுகணையை ஐதராபாத்தில் உள்ள இமாரத் ஆராய்ச்சி மையம் மற்றும் டிஆர்டிஓ அமைப்பின் ஆய்வகங்கள் இணைந்து உருவாக்கி உள்ளன.