டெல்லி,
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 2 நாட்கள் பயணமாக பெல்ஜியம் புறப்பட்டுள்ளார். பெல்ஜியம் தலைநகர் பிரசெல்ஸ் செல்லும் ஜெய்சங்கர் ஐரோப்பிய யூனியன் அமைப்பின் தலைவர்களை சந்திக்கிறார்.
ஐரோப்பிய யூனியன் அமைப்பில் உள்ள 27 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளை ஜெய்சங்கர் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது இந்தியா - ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், சர்வதேச அரசியல் சூழ்நிலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஐரோப்பிய யூனியன் தலைவர்களுடன் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்தியா - ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கடந்த ஜனவரி மாதம் கையெழுத்தான நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த பயணத்தில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.