பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணை செயலாளர் சுஜாதா சர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
“நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி. மற்றும் இயற்கை எரிவாயு போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன. எனவே எல்.பி.ஜி. விநியோகஸ்தர்கள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் பதற்றப்பட தேவையில்லை. அனைத்து அத்தியாவசிய எரிபொருட்களின் விநியோகமும் வழக்கம்போல தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் தேவைக்கு அதிகமாக எரிபொருட்களை வாங்கி குவிக்க வேண்டாம் என்றும், தேவையான அளவில் மட்டும் வாங்க வேண்டும். பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி. தடையின்றி கிடைப்பதற்கும், அவை சரியான நேரத்தில் விநியோகிக்கப்படுவதற்கும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், பொதுமக்கள் மாற்று சமையல் எரிபொருள் முறைகளான பி.என்.ஜி., இன்டக்ஷன் அடுப்பு மற்றும் மின்சார சமையல் அடுப்புகளை அதிகமாக பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள்” என்றார்.