புதுடெல்லி,
முன்னணி ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசான், 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் மேலும் 3 ஆயிரத்து 500 கோடி டாலர் முதலீடு செய்யும் என்று 6 மாதங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தது. இதற்கிடையே, அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆன்டி ஜஸ்சி இந்தியா வந்துள்ளார். அவர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்தியாவில் அமேசான் நிறுவனத்தின் முதலீட்டை விரிவுபடுத் துவது பற்றி அவர் எடுத்துரைத்ததாக தெரிகிறது.
சந்திப்புக்கு பிறகு ஆன்டி ஜஸ்சி தனது 'எக்ஸ்' பக்கத்தில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் அமேசான் ஆன்லைன் வர்த்தகத்துக்கும், வெப் சேவைகளுக்கும், கிளவுடு கம்ப்யூட்டிங் பிரிவுக்கும் வாடிக்கையாளரிடையே அமோக ஆதரவு உள்ளது. அதனால், அதன் இந்திய வர்த்தகம் வலிமையான வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ளது. இந்தியாவை எங்களது முக்கியமான வளர்ச்சி சந்தைகளில் ஒன்றாக பார்க்கிறோம். இந்தியாவில் 2030-ம் ஆண்டுக்குள், மேலும் 1,300 கோடி டாலர் (ரூ.1 லட்சத்து 22 ஆயிரத்து 200 கோடி) முதலீடு செய்ய அமேசான் திட்டமிட்டுள்ளது. இதனால் 2030-ம் ஆண்டுக்குள் எங்களது முதலீட்டு இலக்கு 4 ஆயிரத்து 800 கோடி டாலராக (ரூ.4 லட்சத்து 51 ஆயிரம் கோடி) உயரும். இதில்,
கோடி டாலராக (ரூ.4 லட்சத்து 51 ஆயிரம் கோடி) உயரும். இதில், ஏ.ஐ., கிளவுடு உள்கட்டமைப்பு ஆகியவற்றுக்கு மட்டும் 2 ஆயிரத்து 100 கோடி டாலர் செலவிடப்படும். இதன்மூலம், 2010-ம் ஆண்டில் இருந்து 2030-ம் ஆண்டு வரையிலான அமேசான் முதலீடு 8 ஆயிரத்து 800 கோடி டாலராக உயரும். 2030-ம் ஆண்டுக்குள், 38 லட்சம் வேலைவாய்ப்புகளுக்கு ஆதரவாக இருப்போம். 1 கோடியே 50 லட்சம் சிறுவர்த்தகர்கள், 40 லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏ.ஐ.யின் பலன்களை கொண்டு சேர்ப்போம்.
3 மும்பை, ஐதராபாத் ஆகிய நகரங்களில் அமேசான் வெப் சர்வீசஸ் டேட்டா மையங்களின் திறன் விரிவுபடுத்தப்படும். ஸ்டார்ட்அப்கள், நிறுவனங்கள், அரசு அமைப்புகள் ஆகியவற்றுக்கு ஏ.ஐ. சிப்கள் கிடைக்கச் செய்வோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அமேசான் தலைவருடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
ஆன்டி ஜஸ்சியுடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது. இந்தியாவில் அமே சான் நிறுவனத்தின் 4 ஆயிரத்து 800 கோடி டாலர் முதலீட்டை வரவேற்கிறேன். இது நமது இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். முதலீடுகளுக்கு விருப்பமான இடமாக இந்தியா உருவெடுத்து இருப்பதை இது காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.