புது டெல்லி,
இந்தியா தலைமையில் 2026-ம் ஆண்டிற்கான பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் எரிசக்தி துறை மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம், ஹரியானா மாநிலம் குருகிராமில் நடைபெறவுள்ளது.
கடந்த 2012, 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் இந்தியா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தை தொடர்ந்து, 2026-ம் ஆண்டில் தற்போது இந்தியா நான்காவது முறையாக பிரிக்ஸ் அமைப்பின் கூட்டத்திற்கு தலைமை பொறுப்பேற்று நடத்தவுள்ளது.
இந்த கூட்டத்தில், "மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு" என்ற முக்கிய கருப்பொருளை அடிப்படையாக கொண்டு, அனைவருக்கும் எரிசக்தி கிடைப்பதை உறுதி செய்வதில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் கூட்டு ஈடுபாட்டை வெளிப்படுத்தும் வகையில், நடைபெறவுள்ளது.
பிரிக்ஸ் அமைப்பில் தற்போது பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 11 நாடுகள் இடம்பெற்றுள்ளன.