புது டெல்லி,
இந்திய பாதுகாப்புத் துறையில் முக்கிய முன்னேற்றமாக, 800 கிலோமீட்டருக்கும் அதிக தூரத்தை தாக்கும் திறன் கொண்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்த ஏவுகணைகள் அதிவேகமாக (சூப்பர்சோனிக்) பாய்ந்து, நீண்ட தூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டவை. தற்போது இந்தியாவிடம் சுமார் 450 கி.மீ. வரை தாக்கும் ஏவுகணைகள் இருந்தாலும், பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலை மற்றும் உலகளாவிய பாதுகாப்பு சவால்களை கருத்தில் கொண்டு, எதிர்காலத் தேவைகளை முன்னிட்டு இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. இந்த திட்டம் இந்திய ராணுவத்தின் தாக்குதல் திறனை மேலும் அதிகரிக்கும் என்றும், தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கபப்டுகிறது.