தேசிய செய்திகள்

சர்வதேச போட்டியை நடத்துவதற்கு நம்பகமான நாடாக இந்தியா திகழ்கிறது: பிரதமர் மோடி

பிரதமருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி மகிழ்ந்தனர்.

புதுடெல்லி,

ஜப்பானின் நகோயா நகரில் சமீபத்தில் நடந்த 20-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களை குவித்து 4-வது இடத்தை பிடித்தது. பதக்கம் வென்றவர்கள் மற்றும் போட்டியில் பங்கேற்றவர்களை பிரதமர் மோடி நேற்று நேரில் அழைத்து பாராட்டினார். டெல்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் தேசிய ஸ்டேடியத்தில் நடந்த இந்த சந்திப்பில் வீரர், வீராங்கனைகளுடன் உற்சாகமாக கலந்துரை யாடிய பிரதமர் அவர்களின் விளையாட்டு அனுபவங்களை ஆர்வமுடன் கேட்டறிந்தார். கிரிக்கெட்டில் தங்கம் வென்ற ஆண் மற்றும் பெண்கள் அணியினர் கலந்து கொண்டனர். ஆக்கி, தடகளம், துப்பாக்கி சுடுதல், வில்வித்தை, குத்துச் சண்டை வீரர், வீராங்கனைகளும் பங்கேற்றனர். அவர்கள் பிரதமருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி மகிழ்ந்தனர்.

அவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

'நீங்கள் 140 கோடி இந்தியர்களை பெருமைப்படுத்தியுள்ளீர்கள். தேசிய கொடியை பட்டொளி வீசி பறக்கச் செய்வதே மிகப்பெரிய வெற்றியாகும். எனவே இந்த வெற்றி உங்களுக்கான வெற்றி மட்டுமல்ல. கோடிக்கணக்கான நம்நாட்டு மக்களின் வெற்றியாகும். ஒட்டுெமாத்த தேசத்தின் சார்பில் உங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.சர் வதேச விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கு நம்பகமான மற்றும் விருந்தோம்பல் மிக்க நாடாக இந்தியா உருவெ டுத்து வருகிறது. 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான உரிமத்தை பெற விண்ணப்பித்துள்ளோம். இந்த போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.இந்த முறை ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் 15 முதல் 17 வயதுக்குட்பட்டோர் பலர் இருந்தனர். இவ்வளவு இளம் வயதிலேயே இந்த வீரர்கள் தங்களது அற்புதமான ஆட்டத்திறனால் நாட்டின் பெருமையை உயர்த்தியுள்ளனர். அவர்கள் நாட்டு மக்களின் இதயங்களை வென்றுள்ளனர். வெற்றிக்கு வயது ஒரு தடையல்ல என் பதையே இது காட்டுகிறது. விளையாட்டில், இளம் வயதிலேயே பயணத்தை தொடங்கும் போது, அது கூடுதல் சாதக மாக அமைகிறது.

வீராங்கனைகளை நான் பாராட்ட விரும்புகிறேன். அவர்கள் மொத்தம் 38 பதக்கங்களை பெற்றுத்தந்துள்ளனர். அதில் 11 தங்கப்பதக்கமும் அடங்கும். பெண்கள் ஆக்கி அணி தங்கம் வென்றதன் மூலம் 44 ஆண்டு கால காத்திருப்பு முடிவுக்கு வந்தது. இது மிகவும் பாராட்டுக்குரியது.

கனவுகள் ஒரே நாளில் நனவாகி விடுவதில்லை. அதற்கு பல ஆண்டு கால கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் தேவை. கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா மிகுந்த பொறுமையுடனும், கடின உழைப்புடனும் ஒரு விளையாட்டு சூழலை உருவாக்கியுள்ளது.

ஒரு காலத்தில் பெரிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா குறைவான பதக்கங்கைேளய வென்றது. பல விளையாட் டுகள் குறித்து நமக்கு தெரிந்திருக்கவே இல்லை. இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டோம். அதன் விளைவாக உலக விளையாட்டு அரங்கில் இந்தியாவின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. இப்போது விளையாட்டு துறையில் ஒரு வெளிப்படையான தன்மை இருக்கிறது'.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT