தேசிய செய்திகள்

ஷேக் ஹசீனா வங்காள தேசம் திரும்ப இந்தியா முன்வைக்கும் 2 நிபந்தனைகள்

டிசம்பர் மாதம் வங்காள தேசம் திரும்ப திட்டமிட்டுள்ளதாக ஹசீனா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி

ஷேக் ஹசீனா வங்காள தேசம் திரும்ப இந்தியா 2 நிபந்தனைகளை விதித்துள்ளது.

வங்காள தேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தங்கியுள்ள அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா. வரும் டிசம்பரில் நாடு திரும்பத் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு இந்தியா மறைமுக ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில், அவரது பாதுகாப்பு மற்றும் நியாயமான விசாரணைக்கு வங்காள தேச அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என இந்தியா நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.

கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 5ந் தேதி நடந்த மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, வங்காள தேச ராணுவ விமானம் மூலம் இந்தியா வந்து தஞ்சம் அடைந்தார். அதன்பிறகு இந்தியாவில் தங்கியுள்ள அவர், கடந்த நவம்பர் 9ந் தேதி புதிய பாஸ்போர்ட் மற்றும் பயண ஆவணங்கள் கோரி வங்காள தேச அரசிடம் விண்ணப்பித்துள்ளார். இந்த நிலையில், ஹசீனாவை மீண்டும் வங்காள தேசத்திற்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை அந்த நாட்டு ராணுவம் ஏற்க வேண்டும். என்பது இந்தியாவின் முதல் நிபந்தனையாகக் கூறப்படுகிறது.

இரண்டாவதாக, வங்காள தேச தேசநீதிமன்றம் விதித்துள்ள மரணதண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மேலும், 2024ம் ஆண்டு போராட்ட வன்முறை தொடர்பான வழக்கில் சர்வதேச கண்காணிப்புடன் நியாயமான மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் இடையே பல மாதங்களாகப் பேச்சுவார்த்தை நடை பெற்று வருகிறது.

இது தொடர்பாக, கடந்த அக்டோபர் சந்தேதி, வங்காள தேசத்துக்கான இந்திய உயர் ஆணையர் தினேஷ் திரி வேதி, இந்திய ராணுவத் தலைமைத்தளபதிஜெவரல் தீரஜ் சேத்தைச் சந்தித்துப் பேசியதுகுறிப்பிடத்தக்கது. ஷேக் ஹசீனா நாடு திரும்ப வேண்டும் என்பதில் இந்தியாவுக்கு அரசியல் காரண மும் இருப்பதாகத் தெரிகிறது. அவர் மீண்டும் அவாமி லீக் கட்சியை வழிநடத்தினால்தான் அக்கட்சியால் அரசியல் செல்வாக்கைப் பெற முடியும் என்று இந்தியா கருதுகிறது.

இதற்கிடையே வேறு நாடுகளில் ஹசீனாவுக்கு அடைக்கலம் அளிக்கும் முயற்சிகளும் பலனளிக்கவில்லை. ஆனால், ஹசீனா சொந்த நாட்டுக்கு திரும்பினால் வங்காள தேசத்தில் அரசியல் பதற்றம் அதிகரிக்கக்கூடும் என்பதால், தாரிக்ரஹ்மான் அரசு இதற்கு தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஹசீனாவுக்கு அடைக்கலம் அளிக்க எந்த நாடும் முன்வரவில்லை என்று தாரிக் ரஹ்மானின் உதவிப்பத்திரிகைச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், டிசம்பர் மாதம் வங்காள தேசம் திரும்ப திட்டமிட்டுள்ளதாக ஹசீனா தெரிவித்துள்ளார். நவம்பர் 9-ம் தேதி புதிய பாஸ்போர்ட் மற்றும் பயண ஆவணங்களுக்கும் விண்ணப்பித்துள்ளார். ஆனால் இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் பதில் கூறவில்லை.

SCROLL FOR NEXT