தேசிய செய்திகள்

பாகிஸ்தான்-சீனா எல்லைக் கூட்டு ஆணையத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பு

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதிகள் என்று திட்டவட்டமாககூறியுள்ளது.

புதுடெல்லி,

பாகிஸ்தான் மற்றும் சீனா இணைந்து உருவாக்கியுள்ள 'எல்லைக் கூட்டு ஆணையத்திற்கு' இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து, அதை முற்றிலுமாக நிராகரித்துள்ளது. இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற இந்த ஆணையத்தின் முதல் கூட்டத்தைத் தொடர்ந்து இந்தியா தனது அதிகாரப்பூர்வ பதிலை அளித்துள்ளது.

இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "பாகிஸ்தான் மற்றும் சீனா இடையே எந்த எல்லையும் கிடையாது. சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியப் பகுதிகள் குறித்து முடிவெடுக்க இந்த போலி கூட்டு ஆணையத்திற்கு எந்தவித சட்டப்பூர்வ அடிப்படையும் இல்லை. 1963-ம் ஆண்டு பாகிஸ்தான் - சீனா இடையே போடப்பட்ட எல்லை ஒப்பந்தத்தை இந்தியா எப்போதும் அங்கீகரித்தது இல்லை. அது செல்லுபடியாகாது” என் றார்.

மேலும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதிகள் என் றும் அவர் திட்டவட்டமாக கூறினார். இந்தியாவின் இறையாண்மையைப் பாதிக்கும் வகையில் செயல்படுவதை நிறுத்திவிட்டு, சட்டவிரோதமாக ஆக் கிரமித்துள்ள இந்தியப் பகுதிகளை பாகிஸ்தான் உடனடியாக காலி செய்ய வேண்டும் என்றும் இந்தியா எச்சரித்துள்ளது.

SCROLL FOR NEXT