தேசிய செய்திகள்

கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளின் முதல் ’ சால்வோ’ சோதனை வெற்றி

55 கி.மீ தூரம் செல்லக்கூடிய இந்த ஏவுகணை , ஏவிய பின் இலக்கைத் தானாகத் தேடித் தாக்கும் திறன் கொண்டது.

புதுடெல்லி,

இந்தியாவின் கடல்சார் தாக்குதல் திறன்களை வலுப்படுத்தும் வகையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் இந்திய கடற்படை ஆகியவை நேற்று குறுகிய தூர கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பின் முதல் தொடர் ஏவுதலை வெற்றிகரமாக நடத்தின. ஒடிசாவில் வங்காள விரிகுடா கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்படையின் ஹெலிகாப்டர் தளத்திலிருந்து இந்த சோதனை நடந்தது

சோதனையின் போது, ஒரே ஹெலிகாப்டரிலிருந்து அடுத்தடுத்து இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டன. இது மேம்பட்ட வான்வழி கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பின் முதல் தொடர் ஏவுதலாகும் என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது. இந்தியாவின் முதல் வான்வழி கப்பல் எதிர்ப்பு 'சால்வே சோதனை இதுவாகும். 55 கி.மீ தூரம் செல்லக்கூடிய இது, ஏவிய பின் இலக்கைத் தானாகத் தேடித் தாக்கும் திறன் கொண்டது.