நரேந்திர மோடி 
தேசிய செய்திகள்

விமானப்படை வீரர்களை எண்ணி இந்தியா பெருமிதம் கொள்கிறது: பிரதமர் மோடி

விமானப்படை தினத்தில், நமது வான்பரப்பைப் பாதுகாப்பதில் அவர்கள் காட்டும் துணிச்சலையும் அர்ப்பணிப்பையும் நாம் போற்றுகிறோம்.

புது டெல்லி,

விமானப்படை வீரர்களால் இந்தியா பெருமை கொள்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

விமானப்படை தினம்

வீரர்களின் அர்ப்பணிப்பை பாராட்டும் விதமாக அக்டோபர் 8-ந்தேதி ஆண்டுதோறும் விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது. விமான படையினர் இயற்கை பேரிடர் காலத்தில் மீட்பு பணிகளிலும், நாட்டைப் பாத்துகாக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று (வியாழக்கிழமை) விமானப்படை தினத்தை முன்னிட்டி, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

விமானப்படை வீரர்களைக் கண்டு இந்தியா பெருமை கொள்கிறது; விமானப்படை தினத்தில், நமது வான்பரப்பைப் பாதுகாப்பதில் அவர்கள் காட்டும் துணிச்சலையும் அர்ப்பணிப்பையும் நாம் போற்றுகிறோம்.

இவ்வாறு, அதில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT