டெல்லி,
இந்தியா அதன் நட்பு நாடுகளுடன் அவ்வப்போது கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, ரஷியா, ஜப்பான், அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, இங்கிலாந்து உள்பட பல்வேறு நாடுகளுடன் இந்தியா கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தியா - தாய்லாந்து இடையே நாளை கூட்டு ராணுவ பயிற்சி தொடங்க உள்ளது. நாளை முதல் வரும் 31ம் தேதி வரை இந்த பயிற்சி நடைபெற உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் 15வது கூட்டு ராணுவ பயிற்சி இதுவாகும். தாய்லாந்தில் இந்த கூட்டு ராணுவ பயிற்சி நடைபெற உள்ளது.
இந்த பயிற்சியில் இந்தியா, தாய்லாந்தை சேர்ந்த தலா 85 ராணுவ வீரர்கள் ஈடுபட உள்ளனர். தாய்லாந்தின் சூரத் தனி பகுதியில் நடைபெறும் இந்த பயிற்சியில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை உள்பட பல்வேறு பயிற்சிகள் ராணுவ வீரர்கள் ஈடுபட உள்ளனர்.