தேசிய செய்திகள்

இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதிகட்டத்தில் உள்ளது; பியூஷ் கோயல்

அமெரிக்கா, இந்தியா இடையே வர்த்தக மோதல் நிலவி வருகிறது.

டெல்லி,

இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதிகட்டத்தில் உள்ளதாக மத்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

வர்த்தக ஒப்பந்தம்

அமெரிக்கா, இந்தியா இடையே வர்த்தக மோதல் நிலவி வருகிறது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 2வது முறையாக பதவியேற்றார். இதனை தொடர்ந்து இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் இறக்குமதி வரி விதித்தார். குறிப்பாக, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 50 சதவீத வரி விதிக்கப்படது. இதனை தொடர்ந்து இரு தரப்பு பேச்சுவார்த்தைக்குப்பின் இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி கூடுதல் வரியை 10 சதவீதமாக குறைத்தது.

இதனிடையே, இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 17 சதவீதமாக (கூடுதல் வரிகள் எதுவுமின்றி) நிர்ணயம் செய்ய முயற்சி மேற்கொள்ளபட்டு வருகிறது. அதேவேளை, இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 25 சதவீதமாக உயர்த்த வேண்டுமென அமெரிக்க வர்த்தக அமைப்பு அந்நாட்டு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இறுதிகட்டம்

இந்நிலையில், இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதிகட்டத்தில் உள்ளது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காணொலி வாயிலாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய மந்திரி பியூஷ் கோயல், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. வர்த்தக ஒப்பந்தத்திற்கான செயல்பாடுகள், வழிப்பாதைகள் இறுதிகட்டத்தில் உள்ளன. வர்த்தக ஒப்பந்தத்தில் இழுபறியில் இருந்த பகுதிகள் பேச்சுவார்த்தையில் தீர்க்கப்பட்டு ஒப்பந்தம் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது’ என்றார்.

SCROLL FOR NEXT