தேசிய செய்திகள்

தண்ணீர் தொட்டி மேல் சிக்கிய சிறுவர்கள்: ஹெலிகாப்டர் மூலம் மீட்ட இந்திய விமானப்படை

மாநில அரசின் கோரிக்கையின்படி இந்திய விமானப்படையின் மத்திய வான்வழிப் படைப்பிரிவு எம்.ஐ.-17 வி5 ஹெலிகாப்டரை மீட்புப் பணியில் ஈடுபட்டது.

லக்னோ,

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே உள்ள பகுதியில் இரண்டு சிறுவர்கள் அந்தப் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மேலே விளையாடுவதற்காக ஏறியுள்ளனர். அவர்கள் மேலே சென்ற பிறகு, தொட்டியின் இரும்பு ஏணி திடீரென உடைந்து கீழே விழுந்தது.

இதனால் கீழே இறங்க வழியில்லாமல் அச்சிறுவர்கள் சுமார் 16 மணிநேரத்திற்கும் மேலாக தொட்டியின் உச்சியில் சிக்கித் தவித்தனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் சிறுவர்களை மீட்க முடியவில்லை.

தொடர்ந்து மாநில அரசின் கோரிக்கையின்படி இந்திய விமானப்படையின் மத்திய வான்வழிப் படைப்பிரிவு எம்.ஐ.-17 வி5 ஹெலிகாப்டரை மீட்புப் பணியில் ஈடுபட்டது. இன்று அதிகாலை சுமார் 5:20 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் சிறுவர்கள் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். அங்கு சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.