தேசிய செய்திகள்

விமானப்படையின் பயிற்சி விமானம் விழுந்து விபத்து - விமானி காயம்

மத்திய பிரதேசத்தில் விமானப்படையின் பயிற்சி விமானம் இன்று காலை விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் பிந்த் பகுதியில் விமானப்படையின் பயிற்சி விமானம் இன்று காலை விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானிக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பாராசூட் மூலம் விமானி தப்பினார்.

இதுகுறித்து இந்திய விமானப்படை டுவிட்டரில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 என்ற விமானம் இன்று காலை பயிற்சியின் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும், அப்போது கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.