தேசிய செய்திகள்

பாகிஸ்தான் உலக வரைபடத்தில் நீடிக்க வேண்டுமா? அல்லது வரலாறாக மாறவேண்டுமா? இந்திய ராணுவத் தளபதி எச்சரிக்கை

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என இந்திய ராணுவ தளதி திவேதி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ல மானேஷா மையத்தில் நடைபெற்ற கலந்துரையாடக் நிகழ்ச்சியில் இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி பங்கேற்றார்.

அப்போது ஆப்ரேஷன் சிந்தூர் துவங்க காரணமான சூழ்நிலை மீண்டும் உருவானால் இந்திய ராணுவம் என்ன செய்யும் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு உபேந்திர திவேதி கூறியதாவது:-

இதற்கான பதிலை நான் முன்கூட்டியே அளித்துவிட்டேன். பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளை உருவாக்கி இந்தியாவிற்கு எதிராக செயல்பட வைக்கும் என்றால், உலக வரைபடத்தில் மற்றும் ஒரு அங்கமாக இருக்க வேண்டுமா? அல்லது வரலாறாக மாற வேண்டுமா? என்பதை அந்தநாடு தான் தீர்மானிக்க வேண்டும்.

பாகிஸ்தான் தனது போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால், இந்த நடவடிக்கையின் இரண்டாம் கட்டம் இன்னும் அதிக பலத்துடன் மேற்கொள்ளப்படும். இந்திய அரசு தனது மக்களின் முன்னேற்றம் மற்றும் நலனுக்காக உறுதியுடன் இருக்கிறது தேசிய பாதுகாப்பிற்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு முயற்சிக்கும் உறுதியான பதிலடி கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT