தேசிய செய்திகள்

இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் ஓராண்டு நீட்டிப்பு

டெல்லியிலுள்ள பிரதமர் அலுவலகம் மற்றும் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் வடக்கு அமெரிக்காவில் உள்ள பல்வேறு இந்திய தூதரகங்களிலும் பணியாற்றி உள்ளார்.

புதுடெல்லி

இந்திய வெளியுறவு துறை செயலாளராக பதவி வகித்து வரும் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்திய வெளியுறவு துறை செயலாளராக பதவி வகித்து வருபவர் விக்ரம் மிஸ்ரி. இவருடைய பதவிக்காலம் ஜூலை மாதம் 14-ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. அவர், 2024-ம் ஆண்டு இந்த பதவிக்கு வந்த நிலையில், அதனை ஓராண்டுக்கு மத்திய அரசு நீட்டித்து அறிவித்துள்ளது. இதனை மத்திய அதிகாரிகள், பொதுமக்கள் குறைதீர் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது.

மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இதன்படி, ஜூலை 14-ந்தேதிக்கு பின்னர் ஓராண்டுக்கு வெளியுறவு துறை செயலாளராக மிஸ்ரி பதவி வகிப்பதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு அளித்துள்ளது. அதன் அடிப்படையில், அரசின் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இந்திய வெளியுறவு பணியில் 1989-ம் ஆண்டு சேர்ந்த மிஸ்ரி, மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் பல்வேறு பதவிகளை வகித்தவர். டெல்லியிலுள்ள பிரதமர் அலுவலகம் மற்றும் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் வடக்கு அமெரிக்காவில் உள்ள பல்வேறு இந்திய தூதரகங்களிலும் அவர் பணியாற்றி உள்ளார்.