தேசிய செய்திகள்

4 வயதில் செஸ் தரவரிசையில் இடம்பிடித்து இந்திய சிறுமி சாதனை

சமீபத்தில் நடைபெற்ற ‘பிடே’ தரவரிசை தொடரில் பங்கேற்ற அவர் 1,432 புள்ளிகளை பெற்றார்.

புவனேஸ்வர்,

சர்வதேச செஸ் கூட்டமைப்பான ‘பிடே’ வெளியிட்ட செப்டம்பர் மாத தரவரிசை பட்டியலில், ஒடிசாவை சேர்ந்த 4 வயது சிறுமி எலெனா சர்மா இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இளம் வீராங்கனை

எலெனா சர்மாவுக்கு தற்போது 4 வயது, 6 மாதம், 16 நாட்கள் ஆகிறது. சமீபத்தில் நடைபெற்ற ‘பிடே’ தரவரிசை தொடரில் பங்கேற்ற அவர் 1,432 புள்ளிகளை பெற்றார். இதன் மூலம் ‘பிடே’ தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற இளம் வீராங்கனை என்ற பெருமையை எலெனா பெற்றுள்ளார்.

‘பிடே’ தரவரிசை

இருப்பினும், ஒட்டுமொத்தமாக மிக இளம் வயதில் ‘பிடே’ தரவரிசையில் இடம்பெற்றவர் என்ற சாதனை மகாராஷ்டிராவை சேர்ந்த சர்வாக்யா சிங் குஷ்வாஹா பெயரில் உள்ளது. அவர் 3 வயது, 7 மாதம், 20 நாட்களில் கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த சாதனையை படைத்திருந்தார். 4 வயதிலேயே செஸ் தரவரிசையில் இடம்பிடித்த எலெனாவின் சாதனை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

SCROLL FOR NEXT