புதுடெல்லி,
இந்திய ரெயில்வே 4 புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. குஜராத்தில் ரெயில்வே உட்கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்கு ஊக்கமளிக்கும் வகையில், மேற்கு ரெயில்வேயின் ஆதிப்பூர்-புஜ் பிரிவை (49 கி.மீ.) ரூ.493 கோடி செலவில் இரட்டிப்பாக்க ஒப்புதல் அளித்துள்ளது.
மராட்டியத்தில் ரெயில் திறனை அதிகரிப்பதற்கும், சரக்கு போக்குவரத்தை மேம்படுத்து வதற்கும் ரூ.172 கோடி ஒப்புதல் அளித்துள்ளது. கிழக்கு ரெயில் வேயில் மின்னணு 'இன்டர்லாக்கிங்' அமைப்புகளை நிறுவ ரூ.405 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அதுபோல மத்தியபிரதேசத்தில் இந்தூர் யார்டில் உள்ள சாஸ்திரிய பாலம் என பிரபலமாக அறியப்படும் சாலை மேம்பாலத்தை ரூ.139 கோடி செலவில் புனரமைக்க ஒப்புதல் அளித்து இருக்கிறது. இந்த திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.1,209 கோடி ஆகும்.