தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 34 கோடியை நெருங்கியது

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 34 கோடியை நெருங்கியது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் அவசர கால பயன்பாட்டுக்கு கடந்த ஜனவரி 3-ந் தேதி அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து ஜனவரி 16-ந் தேதி கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. பொதுமக்களும் ஆர்வமுடன் சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் இந்தியாவில் இன்று இரவு 7 மணி தரவுகளின் படி 33 கோடியே 96 லட்சத்து 28 ஆயிரத்து 356 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

நாடுமுழுவதும் இன்று இரவு 7 மணி தரவுகளின் படி 33,96,28,356 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இரவு 7 மணி வரையிலான தகவலின்படி இன்று ஒரேநாளில் மட்டும் 38,17,661 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

18-44 வயதினரில் இன்று 21,80,915 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். 84,107 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். தமிழகம் உள்பட மொத்தம் 8 மாநிலங்களில் 18-44 வயதினர் பிரிவில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட முதல் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT