தேசிய செய்திகள்

இண்டிகோ விமான டயர் வெடித்தது; சென்னை மற்றும் பெங்களூருவுக்கு 6 விமானங்கள் திருப்பி விடப்பட்டன

ஐதராபாத் விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தின் டயர் வெடித்த நிலையில் சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களுக்கு 6 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. #RajivGandhiInternationalAirport

ஐதராபாத்,

திருப்பதியில் இருந்து ஐதராபாத் நோக்கி இண்டிகோ 6இ 7117 ரக விமானம் ஒன்று நேற்று இரவு 8.55 மணியளவில் புறப்பட்டு சென்றது. ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இரவு 10.25 மணியளவில் விமானம் தரையிறங்கியபொழுது அதன் டயர் ஒன்று வெடித்தது.

இந்த விமானத்தில் 72 பேர் பயணித்துள்ளனர். அதில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரோஜாவும் ஒருவர். விமானத்தின் டயர் வெடித்த நிலையில், ஐதராபாத் விமான நிலையத்தின் ஓடுதளம் சிறிது நேரம் மூடப்பட்டது.

இதனை தொடர்ந்து 6 விமானங்கள் சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன.