தேசிய செய்திகள்

ஜுன் 4 வரை குவைத்திற்கான விமானங்களை ரத்து செய்த இன்டிகோ!!

பாதுகாப்பான விமான இயக்க சூழ்நிலை உருவானவுடன் சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

புது டெல்லி,

குவைத் மீது ஈரான் இன்று அதிகாலை மீண்டும் தாக்குதல் நடத்தியது. குவைத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். இந்த தாக்குதலை தொடர்ந்து குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அறிவிப்பு

பாதுகாப்பு காரணங்களால், குவைத்திற்கு செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து விமான சேவைகளையும் ஜுன் 4, 2026 மதியம் 12 மணி வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

பயணிகளின் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பே முதன்மை என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட விமான போக்குவரத்து அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து நிலைமையை கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளது.

சேவைகள்

மேலும், பாதுகாப்பான விமான இயக்க சூழ்நிலை உருவானவுடன் சேவைகள் மீண்டும் தொடங்கப்படும். பயணிகள் விமான நிலையத்திற்கு செல்லும் முன் தங்களது விமானத்தின் நிலையை சரிபார்க்குமாறு இண்டிகோ அறிவுறுத்தியுள்ளது.