டெல்லி,
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனம் இண்டிகோ. இந்த விமான நிறுவனம் தினமும் சராசரியாக 2,200 உள்நாடு, வெளிநாட்டு விமான சேவைகளை இயக்கி வருகிறது.
இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இண்டிகோ விமான பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வதில் இன்று சிக்கல் ஏற்பட்டுள்ளது. இண்டிகோ இணையதளத்தில் விமான டிக்கெட் முன்பதிவு பிரிவில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனால், வாடிக்கையாளர்கள் பயண டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். இந்த தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் முயற்சியில் இண்டிகோ விமான நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.