பெங்களூரு,
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உள்ள மூடபத்ரி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சந்தேஷ். இவர் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் எழுந்துள்ள நிலையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகி போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
சம்பவத்தன்று நள்ளிரவு மைசூரு அருகே உள்ள பகுதியில் இன்ஸ்பெக்டர் சந்தேஷ் ஒரு பெண்ணின் வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைகிறார். இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த பெண்ணுடன் அவர் கள்ளத்தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது இந்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலானது.
வழக்கு தொடர்பாக தன்னை பார்க்க வந்த பெண்ணை தன்னுடைய அதி காரத்தை பயன்படுத்தி இன்ஸ்பெக்டர் சந்தேஷ் பாலியல் ரீதியாக துன்பு றுத்தியதாக தெரிகிறது. இதுமட்டுமன்றி, பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் மகள் மீதும் தவறான எண்ணத்துடன் குறிவைத்ததாக கூறப்படும் ஆடியோ உரையாடல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து மங்களூரு போலீஸ் கமிஷனர் சுதீர்குமார் ரெட்டி தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் யாராவது இருந்தால், எந்தவித அச்சமும் இன்றி துணிச்சலுடன் முன்வந்து புகார் அளிக்கலாம். அவர்களின் அடையாளம் காக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இதைதொடர்ந்து இன்ஸ்பெக்டரின் பாலியல் லீலை வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து சந்தேஷை பணி இடைநீக்கம் செய்து கமிஷனர் உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.