தேசிய செய்திகள்

புதுச்சேரி சட்டமன்றத்தில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்

புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

புதுச்சேரி,

புதுச்சேரியில் முதல்-மந்திரி ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இப்போது முழு அளவிலான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது.

இந்நிலையில், புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தொடர் 12-ந்தேதி(இன்று) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் புதுச்சேரி முதல்-மந்திரியும், நிதித்துறை மந்திரியுமான ரங்கசாமி, சட்டமன்றத்தில் 2026-2027ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

மேலும், 2026-2027 நிதியாண்டின் முதல் சில மாதங்களில் புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான வாக்கெடுப்பு கணக்கு மசோதாவை முதல்-மந்திரி ரங்கசாமி இன்று தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.