தேசிய செய்திகள்

பாலையா நடித்த தெலுங்குப் பட காட்சியை பதிவிட்டு டிரம்பிற்கு பதிலடி கொடுத்த ஈரான்

போரானது வான்​வழித் தாக்குதல்​களால் மட்​டுமின்றி சமூக வலைத்தள பதிவு​களாலும் தீவிரமடைந்து வரு​கிறது.

புதுடெல்லி,

தெலுங்கு நடிகர் நந்​தமுரி பால​கிருஷ்ணா​வின் (பாலய்​யா) சண்டைக் காட்சியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை, ஈரான் கிண்​டல் செய்துள்ளது.

ஈரான் ​மற்றும் அமெரிக்கா இடையே மோதல் போக்கு தொடர்ந்து நீடிக்​கிறது. எண்ணெய் வழிப்போக்குவரத்தில் உலகளவில் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை வழக்கம்போல செயல்படாததால் உலகின் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகள் நிலவி வருகின்றன.

இதைத் தொடர்ந்து, அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெறும் இந்த போரானது வான்​வழித் தாக்குதல்​களால் மட்​டுமின்றி சமூக வலைத்தள பதிவு​களாலும் தீவிரமடைந்து வரு​கிறது. அமெரிக்கா​வின் கட்டுப்பாட்டில் ஈரான் இருப்​பது போன்ற ஏ.ஐ. மூலம் உரு​வாக்​கப்​பட்ட புகைப்​படங்​கள், வீடியோக்​களை அவ்வப்போது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளி​யிட்டு வரு​கிறார். அதற்கு ஈரானும் தக்க பதிலடி கொடுத்து வரு​கிறது.

அதன் ஒரு பகு​தி​யாக ஈரான் அண்​மைக் காலமாக இந்​திய திரைப்படங்​களின் காட்​சிகளை பயன்​படுத்தி டிரம்பை கிண்​டல் செய்து வரு​கிறது. சமீபத்​தில் பாலிவுட் நடிகர் அக் ஷய் குமாரின் வைரல் மீம் ஒன்றை பயன்​படுத்தி டிரம்ப்பை கேலி செய்​தது.

இந்​நிலை​யில் ஜிம்பாப்வே​வில் உள்ள ஈரான் தூதரகம், தெலுங்கு நடிகர் நந்​தமுரி பால​கிருஷ்ணா​வின் (பாலய்​யா) சண்​டைக் காட்சியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து டிரம்ப்பை கிண்​டல் செய்துள்ளது.

2023-ம் ஆண்டு வெளி​யான `பகவந்த் கேசரி' திரைப்​படத்​தின் 58 வினாடி அதிரடி காட்​சியை எக்ஸ் தளத்​தில் பகிர்ந்​தது. அதில், நடிகர் பால​கிருஷ்ணா ஒரே சமயத்​தில் தன்னை நோக்கி வரும் ஏராள​மான துப்​பாக்கி குண்​டு​களை பாதாள சாக்​கடை​யின் மூடியை வைத்தே தடுக்​கும் காட்​சிகள் இடம்​பெற்​றுள்​ளன. அந்த வீடியோவுடன், “டி​ரம்ப் ஈரானை அழித்​து​விடு​வ​தாக பேசுகிறார். ஆனால் ஈரான் தன்​னைத் தற்​காத்​துக் கொள்ள முடியாத நாடு அல்ல என்​பதை அவர் அறி​வார். டி​ரம்ப் மற்​றும் அவரது நிர்​வாகம் சமீபத்​தில் ஹாலிவுட் படங்​களை விட பாலிவுட் படங்​களையே பார்த்து வரு​கிறார்​கள்” என்​றும் பதி​வில் நகைச்​சுவை​யாக தெரிவிக்​கப்​பட்​டுள்ளது.

SCROLL FOR NEXT